
தேவையானவை: பச்சரிசி - 2 கப், பசும்பால் - 3 கப், உப்பு - ஒரு டீஸ்பூன், நெய் - பொரிக்க.
செய்முறை: பச்சரிசியை கழுவி வைக்கவும். பாலைக் காய்ச்சி, அதில் களைந்த அரிசியைப் போட்டு அரை வேக்காடாக வேக வைக்கவும். பிறகு அதை கெட்டியாக வடைமாவு பதத்தில் அரைத்து உப்பு சேர்க்கவும்.
வாணலியில் நெய் ஊற்றி, காய்ந்ததும் மாவை சின்னச் சின்ன வடைகளாகத் தட்டிப் போட்டு, பொரித்து எடுக்கவும். வித்தியாசமான சுவையோடு இருக்கும் இந்த வடை.
This entry was posted
on Monday, July 21, 2008
at 11:47 AM
and is filed under
வடை
. You can follow any responses to this entry through the
comments feed
.