
தேவையானவை: மைதாமாவு - ஒரு கப், பச்சரிசி மாவு - 3 டேபிள்ஸ்பூன், துருவிய தேங்காய் - ஒரு கப், முந்திரி - 11, ஏலக்காய் - 5, சர்க்கரை - ஒண்ணேகால் கப், நெய் - 5 டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: மைதாமாவு, அரிசிமாவுடன் உப்பு சேர்த்து, தண்ணீர் விட்டு சற்று நீர்க்க கரைத்துக் கொள்ளவும். அடி கனமான கடாயில் சர்க்கரை, தேங்காய், முந்திரி, ஏலக்காயை போட்டு இளஞ்சூட்டில் கிளறி, கெட்டியான பூரணமாக தயாரித்துக் கொள்ளவும். தோசைக்கல் காய்ந்ததும் எண்ணெய் விட்டு, மிதமான தீயில் மைதா கரைசலை மெல்லிய தோசையாக வார்க்கவும். வெந்தவுடன் திருப்பிப் போட்டு, அதன் மேல் தயாரித்து வைத்துள்ள பூரணத்தை பரவலாக உதிர்த்து, சிறிது நெய் விட்டு தோசையை சுருளாக சிறிய வடிவத்தில் சுருட்டவும்.
This entry was posted
on Monday, July 21, 2008
at 11:59 AM
and is filed under
தோசை வகைகள்
. You can follow any responses to this entry through the
comments feed
.